Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் 18 முதல் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (15:29 IST)
ஜூன் 18 முதல் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஜூன் 18ஆம் தேதி 14 மாவட்டங்களிலும் ஜூன் 19ஆம் தேதி 12 மாவட்டங்களிலும் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் இன்றும் நாளையும் தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 17ஆம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதியில் லேசான மழை பெய்யும்
 
ஜூன் 18ஆம் தேதி திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

இந்தியாவை வெறுப்பேற்ற பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருங்கிய உறவு.. அசிம் முனீர் மீண்டும் அமெரிக்கா பயணம்!

அன்புமணிக்கு நான் என்ன குறை வெச்சேன்! - கலங்கி பேசிய ராமதாஸ்!

அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை.. டிரம்புக்கு செக் வைத்த மோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments