Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (08:46 IST)
இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு கேரளா உள்பட தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு என தெரிவித்துள்ளது. 
 
எனவே மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள்  மழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments