சென்னையில் விடிய விடிய கனமழை: சாலைகளில் மழைநீர்.. முடிந்தது கோடை..!

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (07:32 IST)
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கன மழை பெய்ததை அடுத்து சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
சென்னையில் கடந்த பல மணி நேரங்கள் ஆக தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் சாலைகள் குளம் போல் காட்சி அளிக்கின்றன. 
 
சென்னையில் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது என்பதை குறிப்பிடத்தக்கது. ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் மரம் முறிவு போன்றவற்றால் சென்னையின் சில இடங்கள் ஸ்தம்பித்துள்ளது. 
 
மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை இன்று மழை நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments