Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இரவு முழுவதும் வெளுத்து கட்டிய மழை.. குளிர்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Siva
வியாழன், 13 ஜூன் 2024 (07:20 IST)
சென்னையில் நேற்று இரவு முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்ததை அடுத்து குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவியது என்பதும் இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் அவ்வப்போது லேசான மழை பெய்தாலும் நேற்று சென்னையின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக தேனாம்பேட்டை, அடையாறு, மயிலாப்பூர், சேப்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை மாறியது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை உண்டு என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் இனி வெயிலின் தாக்கம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் மாலை முதல் இரவு வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments