Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றிரவு 7 மணிக்குள் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (16:29 IST)
இன்று இரவு 7 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்கள் ஆக வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இடையிடையே சில பகுதிகளில் மட்டும் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக சென்னையில் இன்று திடீரென வானிலை மாறி பல பகுதிகளில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, நீலகிரி, ஈரோடு, கோயமுத்தூர், திருப்பூர், திண்டுக்கல், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இரவு 7 மணிக்குள் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

மக்களின் குறைகளை நிறைவேற்ற வக்கில்லாத திமுக அரசு, ஒரு Coma அரசு! ஈபிஎஸ் ஆவேசம்..!

உயிரினங்கள் வாழும் பிரம்மாண்ட கிரகம்! கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

மோடியை அடுத்து அமெரிக்காவுக்கு செல்லும் நிர்மலா சீதாராமன்.. டிரம்ப் உடன் சந்திப்பு இல்லையா?

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழிகள் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments