வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இன்று 15 மாவட்டங்களில் கனமழை..!

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2023 (13:36 IST)
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த 16 மாவட்டங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.
 
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
மேற்கண்ட 16 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

Tvk Meeting: தமிழ்நாட்ல இருந்த யாரும் வராதீங்க!.. என்.ஆனந்த் கோரிக்கை!..

அடுத்த கட்டுரையில்
Show comments