11 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2023 (13:51 IST)
11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அக்னி நட்சத்திர வெயில் முடிந்த பின்னரும் தற்போதும் வெயில் அதிகமாக கொளுத்தி வருகிறது என்பதும் பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் அடித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இருப்பினும் அவ்வப்போது தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து பூமியின் வெப்பத்தை குளிர்வித்து வருகிறது என்பதும் இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரையும் என்று தெரிவித்துள்ளது. அந்த 11 மாவட்டங்கள் இதோ நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments