சென்னை உள்பட 6 மாவட்டங்களில் 4 மணி வரை மழை: வானிலை எச்சரிக்கை..!

Siva
வியாழன், 19 டிசம்பர் 2024 (13:55 IST)
சென்னை உள்பட ஆறு மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்றுள்ள நிலையில், தற்போது தெற்கு ஆந்திராவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்பட ஆறு மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு நெல்லூர் அருகே சென்று, மீண்டும் வட தமிழகத்தை நோக்கி நகரும் என்றும், அதன் பின் டெல்டா மற்றும் வட இலங்கை வழியாக உள் மாவட்டங்களை கடந்து அரபிக்கடல் நோக்கி செல்ல இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை தவிர்க்கவும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கையால் பரபரப்பு!

ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் 'ஜிஹாத்' ஆன்லைன் பயிற்சி வகுப்பு: மசூத் அஸ்ஹர் சகோதரி தொடங்கினாரா?

ஏர் இந்தியாவின் முக்கிய அதிகாரி தங்கியிருந்த அறையில் மர்ம மரணம்: தற்கொலை குறிப்பும் இல்லை!

இதுகூட தெரியவில்லையா? ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமன் வேட்புமனு நிராகரிப்பு..!

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments