அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

Siva
ஞாயிறு, 3 ஆகஸ்ட் 2025 (15:51 IST)
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று  கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இன்று திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
 
நாளை அதாவது ஆகஸ்ட் 4 அன்று கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், ஆகஸ்ட் 5 அன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மிக கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
 
ஆகஸ்ட் 6 அன்று  கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 7 அன்று கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
 
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments