Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கொட்ட போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (11:06 IST)
சமீபத்தில் ஏற்பட்ட புயலின் பாதிப்பிலிருந்து இன்னும்  மக்கள் மீண்டு வராத நிலையில் இன்று அடுத்த மூன்று மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
 வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியதிலிருந்து சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் தற்போது அரபி கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்து தாழ்வு காரணமாக தென் மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
 
 இதனை அடுத்து மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments