Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 8 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Siva
செவ்வாய், 25 ஜூன் 2024 (08:01 IST)
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது.

தமிழகம் நோக்கி மேற்கு திசை காற்று வேக மாறுபாடு அதிகமாக இருப்பதாகவும் அதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் உள்ள சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று ஜூன் 27 முதல் 30 ஆம் தேதி இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி,  கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில்  சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குலதெய்வ வழிபாட்டுக்கு எதிராக பேசினாரா ஆர்.என்.ரவி: காவல்துறையில் புகார் அளித்த ஆளுனர் மாளிகை..!

இன்று 8 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படம்.. ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியீடு..!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம்.. மேலும் 7 பேர் கைது.. இன்னும் கைது இருக்கும் என தகவல்..!

இப்படிப்பட்ட அமைச்சர் இருக்கும்வரை தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments