Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Mahendran
வெள்ளி, 17 மே 2024 (17:22 IST)
பொதுவாக மே மாதம் என்றாலே கூட வெயில் கொளுத்தும் மாதமாக இருக்கும் என்ற நிலையில் இந்த ஆண்டு வித்தியாசமாக கோடை காலத்தில் தமிழக முழுவதும் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது. ஆனால் தற்போது கடந்த இரண்டு நாட்களாக கனமழை மற்றும் மிக கன மழை பெய்து வருகிறது என்பதும் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி இன்று இரவு 7 மணி வரை 27 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை , தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே மே மாத கடைசி வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் கோடை வெயில் தமிழகத்தை பொறுத்தவரை அவ்வளவுதான் என்று கூறப்பட்டு வருகிறது. மொத்தத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தப்பித்து விட்டார்கள் என்றே கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments