Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Siva
வெள்ளி, 17 மே 2024 (08:17 IST)
ஒரு பக்கம் அக்னி நட்சத்திர வெயில் சில மாவட்டங்களில் கொளுத்தி கொண்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் கோடை மழை பெய்து வருகிறது என்பதும் தினந்தோறும் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோடை வெயில் நேரத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவது பொது மக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் கோடையின் தாக்கமே கடந்த சில நாட்களாக தெரியவில்லை என்று மக்கள் மகிழ்ச்சியாக தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது..

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments