Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2023 (17:29 IST)
தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகியவை காரணமாக தமிழகம் முழுவதும்  பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்னும் 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, சேலம், நாமக்கல்,  கிருஷ்ணகிரி ஆகிய 23 மாவட்டங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments