Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

Siva
புதன், 27 நவம்பர் 2024 (21:07 IST)
வங்கக்கடலில் தோன்றியுள்ள புயல் காரணமாக, தமிழக முழுவதும் பரவலாக இன்னும் மூன்று நாட்களுக்கு கன மழை மற்றும் மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில், இன்று இரவு 10:00 மணி வரை தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை  பெய்யும்   என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், காரைக்கால் பகுதியிலும் நல்ல மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே, இரவு 10 மணி அல்லது அதற்கு மேல் வெளியில் செல்பவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், நவம்பர் 30ஆம் தேதி வரை தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

புயல், கனமழையால் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்த பேரிடர் மேலாண்மை ஆணையம்..!

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments