Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி தினத்தில் 15 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Siva
வியாழன், 31 அக்டோபர் 2024 (07:10 IST)
இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் 15 மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்று வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல் புதுச்சேரியிலும் இடிமின்னலுடன் மழை பெய்து வருகிறது.
 
இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் நவம்பர் 5 வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்று தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும்.
 
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு மேகமூட்டமாக காணப்படும் என்றும் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது."
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் நீதிபதியை காதலிப்பதாக டார்ச்சர்.. வழக்கறிஞர் மீது அதிரடி நடவடிக்கை..!

அக்டோபர் மாதம் ‘இந்துக்களின் பாரம்பரிய மாதம்’: ஆஸ்திரேலியா அறிவிப்பு

பெண்கள் சத்தமாக குரான் ஓதக்கூடாது: தாலிபான்கள் புதிய நிபந்தனை..!

ஆந்திர கடலோர பகுதியில் வளிமண்டல சுழற்சி: சென்னையில் கனமழை தொடரும்..!

விஜய் எழுப்பிய பாசிசம், பாயாசம் கேள்வி சரியானதே: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments