பகல் 1 மணி வரை மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட்..!

Mahendran
செவ்வாய், 28 அக்டோபர் 2025 (10:28 IST)
மோன்தா புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வரும் நிலையில், இன்று பிற்பகல் ஒரு மணி வரை மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
 
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பகல் ஒரு மணி வரை கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும் என்றும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், வழக்கத்துக்கு மாறாக மெரினா கடற்கரை கடும் சீற்றத்துடன் காணப்படுவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments