10 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை.. குடையில்லாமல் வெளியே செல்லாதீர்கள்..!

Siva
புதன், 8 அக்டோபர் 2025 (08:14 IST)
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையை பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
எனவே, மேற்கண்ட 10 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், தமிழகம் முழுவதும் படிப்படியாக வெப்பம் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. சென்னையில் ஒரு வாரம் சிறப்பு முகாம்..!

வாட்ஸ் அப் போல் மெசேஜ் அனுப்பலாம்.. வாய்ஸ், வீடியோகால் பேசலாம்.. எக்ஸ் தளத்தின் புதிய வசதி..!

தங்கம் விலை திடீர் சரிவு.. இன்று ஒரே நாளில் 1000 ரூபாய்க்கும் மேல் சரிந்ததால் மகிழ்ச்சி..!

நேற்று உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

திருப்பதியில் தங்கும் அறைகள் என போலி விளம்பரம்.. ஆன்லைன் மோசடியால் பணத்தை இழந்த பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments