Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (20:54 IST)
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
 

 
உடல்நலக் குறைவு காரணமாக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தமிழக அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து இன்று திங்கட்கிழமை மாலை முதல் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன.
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேபோல் சில தினங்களாக ஜெயலலிதா சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றதாக சில வதந்திகள் பரப்பப்பட்டது. அதனையும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததை அடுத்து அந்த வதந்திக்கு முடிவுகட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments