Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Mahendran
சனி, 15 மார்ச் 2025 (09:32 IST)
தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தான் கோடை காலம் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு மட்டும் பிப்ரவரி மாதம் முதல் வெயில் கொளுத்தி வருகிறது. மேலும், வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இடையில் சில நாட்கள் மழை பெய்த நிலையில், மீண்டும் வெப்பம் அதிகரிக்க தொடங்கி விட்டதால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றும் நாளையும் அதாவது மார்ச் 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் வெப்பம் இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை அடுத்து, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மார்ச் 17 முதல் 19ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியை எதிர்ப்பவர்கள், தமிழ் படங்களை ஏன் இந்தியில் டப் செய்கிறீர்கள்? பவன் கல்யாண்

இந்த ராசிக்காரர்களுக்கு வேலை சிரமங்கள் குறைந்து நிம்மதி கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (15.03.2025)!

அதிகபட்ச வெப்பநிலை 41 - 44 டிகிரி செல்சியஸ் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

நெல்லை - திருச்செந்தூர் - நெல்லை ரயில் 25 நாட்களுக்கு ரத்து.. என்ன காரணம்?

தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம்.. தேதியை அறிவித்த விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments