பேருந்து ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி: பயணிகளை காப்பாற்ற ஓட்டுனரின் சாமர்த்திய செயல்!

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (12:12 IST)
பேருந்து ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி: பயணிகளை காப்பாற்ற ஓட்டுனரின் சாமர்த்திய செயல்!
சென்னையில் இருந்து நாகப்பட்டினம் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று இரவு சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் முருகன் என்பவர் ஓட்டிச் சென்றார் 
 
அப்போது அவர் பேருந்தை இயக்கி கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் பேருந்தில் இருந்த பயணிகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சாமர்த்தியமாக செயல்பட்டு சாலையோர தடுப்பில் பேருந்தை மோதி நிறுத்தியுள்ளார்.
 
இதனை அடுத்து அவர் பேருந்து பயணிகளின் உதவியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தற்போது அவர் குணமாகி வருகிறார் என்றும் கூறப்படுகிறது 
 
தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட போதும் தன்னுடைய பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளை காப்பாற்ற வேண்டும் என்று அவர் செயல்பட்ட விதம் அனைவரின் பாராட்டுக்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன்.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் அசத்தும் விருந்து!

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழக்க வைக்க செய்வோம்: செங்கோட்டையன் சவால்

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லும் வெள்ளி.. இன்று ஒரே நாளில் ரூ.8000 உயர்வு..!

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

அடுத்த கட்டுரையில்
Show comments