Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து...

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (11:03 IST)
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.


 

 
இலங்கை இறுதிப்போரின் போது தமிழினத்தை காக்க உயிர் நீத்த தமிழர்களுக்கு சென்னை மெரினாவில் மே 17 இயக்கத்தினர் கடந்த மே 21-ஆம் தேதி அஞ்சலி செலுத்த முயற்சித்தனர். இதற்கு அனுமதி அளிக்காத காவல்துறை மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உட்பட சிலரை கைது செய்து சிறையில் அடைத்தது. 
 
இதனையடுத்து திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது தமிழக அரசு. இதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான், திருமாவளவன் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தை தெரிவித்து, அவர் மீதான் குண்டர் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர். 
 
இதனையடுத்து இன்று மீண்டும் ஒரு வழக்கில் அவரை கைது செய்துள்ளது காவல்துறை. கடந்த 2016-ஆம் ஆண்டு பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது போராட்டம் நடத்திய வழக்கில் மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தியை மீண்டும் கைது செய்தது காவல்துறை. 
 
அதைத் தொடர்ந்து தங்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என திருமருகன் உட்பட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
இந்நிலையில், திருமுருகன் உட்பட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 100 நாட்களுக்கும்  மேல் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments