Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்கு குழந்தை உண்டா?: பதிலளிக்கிறார் அவரது தோழி!

ஜெயலலிதாவுக்கு குழந்தை உண்டா?: பதிலளிக்கிறார் அவரது தோழி!

Webdunia
சனி, 17 டிசம்பர் 2016 (11:01 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தையடுத்து அவரை பற்றி பல்வேறு வதந்திகள் உலா வந்தது.


 
 
குறிப்பாக ஜெயலலிதாவுக்கு குழந்தை உள்ளது என்ற வதந்தி அதிகமாகவே பரவியது. அதிலும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை அதிகமாக பரப்பி அதுதான் ஜெயலலிதாவின் மகள் என கூறிவந்தனர். அந்த பெண்ணும் பார்க்க ஜெயலலிதா போல் இருந்ததால் பலரும் அதை நம்பினர். ஆனால் அது ஜெயலலிதாவின் மகள் இல்லை தனது உறவினர் ஒருவர் என அவரது மேலும் சில புகைப்படங்களை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பாடகி சின்மயி.
 
ஆனாலும் வதந்தி பரப்புவோர் அடங்கவில்லை. ஜெயலலிதாவுக்கு மகள் இருக்கிறார் எனவே சொல்லி வந்தனர் சமூக வலைதளமான வாட்ஸ்ஆப்பில். இந்நிலையில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் நடிகையுமான செம்மீன் ஷீலா ஜெயலலிதாவுக்கு குழந்தை இருக்கிறதா என்பதற்கு விளக்கம் அளித்துள்ளர்.
 
ஜெயலலிதா நடிக்கும் போது அவரின் வீட்டுக்கு நான் செல்வதும், என் வீட்டுக்கு அவர் வருவதும் வழக்கம். ரொம்ப குளோஸ் நாங்க ரெண்டு பேரும். ஜெயலலிதாவின் அண்ணனுக்கு பொண்ணு பார்த்து கட்டி வைத்ததே நான் தான். அவ்ளோ நெருங்கிய தோழி அவர்.
 
குழந்தைகள் மீது அதிக பிரியம் கொண்ட ஜெயலலிதா காரில் எப்பொழுதும் சாக்லேட் வைத்திருந்து அதனை குழந்தைகளுக்கு கொஞ்சி கொஞ்சி கொடுப்பார். மேலும் ஜெயலலிதா தனது அண்ணன் குழந்தைகளை தனது சொந்த குழந்தைகள் போல சில காலம் வளர்த்து வந்தார்.
 
ஜெயலலிதா தனது அண்ணன் மகள் தீபாவை தனது மடியில் தூக்கிவைத்து கொஞ்சுவார். இதனை பார்த்த சிலர் அது ஜெயலலிதாவின் மகள் என நினைத்து அப்போதே பரவலாக பேச ஆரம்பித்தனர் என கூறினார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments