’தல’, தளபதிக்கு ஆயுதபூஜை வாழ்த்து கூறிய ஹர்பஜன்சிங்!

Webdunia
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (20:01 IST)
பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் எப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்தாரோ அப்போது முதல் அவரது டுவிட்டர் பக்கத்தில் தமிழ் டுவிட்டுக்கள் வர ஆரம்பித்துவிட்டன. அவரது டுவீட்டில் பெரும்பாலும் தமிழ் சினிமா குறித்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்றும் இன்றும் தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஹர்பஜன்சிங் தனது டுவிட்டரில் வித்தியாசமான ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

துர்கை அம்மன் துணை!! பெண்களின் வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல என்பதை உணர்த்துகிறது #தல யின் #நேர்கொண்டபார்வை. அநீதிகள் அடங்க அதர்மங்கள் ஒழிய வீரம் கொண்டு #பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் எழுந்து வாருங்கள் #தளபதி யின் #சிங்கபெண்களே. இனிய #விஜயதசமி நல்வாழ்த்துகள்  என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹர்பஜன்சிங்கின் இந்த டுவீட்டுக்கு தல ரசிகர்களும், தளபதி ரசிகர்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த ஒரே ஒரு டுவிட்டுக்கு 36 ஆயிரம் லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments