Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை : நடந்துநரை அடித்த பெண் .. பரபரப்பு சம்பவம்

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (19:18 IST)
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச் செல்வி  (28) என்பவர் மன்னார்குடி அரசு விரைந்து பேருந்தில்   சென்றுள்ளார். அப்போது கும்பகோணம் அருகே பேருந்து சென்றபோது, பேருந்து நடத்துநர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்ச்செல்வி , சம்பவ இடத்திலேயே நடத்துநரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
 
இதனையடுத்து, பேருந்தை நிறுத்திய தமிழ்ச்செல்வி, பேருந்தைவிட்டு இறங்கி காவல்நிலையத்துக்குச் சென்று, இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.
 
அரசு விரைவுப் பேருந்து நடத்துனரான ராஜூ, இதேபோன்று பாலியல் பிரச்சனையில் சிக்கி ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வேலைக்குச் சேர்ந்தார்.

இந்நிலையில் தமிழ்செல்விக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரித்து, ராஜூ மீது  துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொரோனா போன்று பரவும் புதிய வைரஸ்.. இம்முறை ரஷ்யாவில் இருந்தா?

புவிசார் குறியீடு ஏன் தரப்படுகிறது? அதனால் என்ன பயன்? தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

நேற்றைய மோசமான சரிவுக்கு பின் இன்று உயர்ந்தது பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

உங்களை நேரில் சந்திக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்