Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துண்டு சீட்டு படிக்க தெரியாதவர் இதை படிப்பாரா!? – மறைமுகமாய் விமர்சிக்கும் எச்.ராஜா

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (18:02 IST)
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் திமுகவை விமர்சித்து பேசியுள்ளார் எச்.ராஜா.

இந்தியா முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக பாஜக சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்ட கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்கள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார் எச்.ராஜா. தமிழக எதிர்கட்சிகள் இலங்கை தமிழர்கள் குடியுரிமை வேண்டி போராடி வரும் நிலையில் இதுகுறித்து பேசிய எச்.ராஜா ”பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இலங்கையில் ஒரு தமிழர் கூட கொல்லப்படவில்லை. எதிர்க்கட்சிகள் மக்களை தவறான திசையில் வழிநடத்துகின்றனர்.

முதலில் அவர்கள் குடியுரிமை சட்டத்தை முழுமையாக படித்து பார்க்க வேண்டும். துண்டு சீட்டை கூட சரியாக படிக்க தெரியாதவர் இதை எப்படி படிப்பார்?” என பேசியுள்ளார்.

பேச்சுக்கிடையே துண்டு சீட்டு படிக்க தெரியாதவர் என மு.க.ஸ்டாலினைதான் எச்.ராஜா கிண்டல் செய்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசி கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 வழக்குகளில் எச் ராஜா குற்றவாளி என தீர்ப்பு.. 6 மாதம் சிறை தண்டனை..!

ஊத்தங்கரையில் 503 மி.மீ. மழை.. வெள்ள நீரில் மிதக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம்..!

திருவண்ணாமலையில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர்.. அமைச்சர் எவ வேலு

இன்று ஒரே நாளில் ரூ.480 குறைந்தது தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

ஒரே ஒரு புயல்.. மொத்த தண்ணீர் கஷ்டமும் தீர்ந்தது.. ஏரிகளின் கொள்ளளவு நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments