Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளின் கையை வெட்ட வேண்டும்: எச்.ராஜா

Webdunia
வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (16:54 IST)
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கிட்டத்தட்ட தினந்தோறும் பரபரப்பான அல்லது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டி கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் இன்று அவர் கூறிய கருத்து என்னவெனில் ``லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளைக் கண்டுபிடித்து, அவர்களின் கைகளை வெட்ட `எந்திரன்' படத்தில் வரும் ரோபோ போன்ற மெஷின்கள் கொண்டு வர வேண்டும் என்று கூறியதுதான்.

இதுகுறித்து இன்று அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்தில் வரும் ரோபோ, தன்னிடம் லஞ்சம் கேட்ட  டிராஃபிக் போலீஸின்  கேரக்டரில் நடித்தவரை கைகளை வெட்டும். அதுபோல, லஞ்சம் வாங்கிக்கொண்டு இந்துக் கோயில் நிலங்களை கிறிஸ்துவ, முஸ்லிம் அமைப்புகளுக்கு ரிஜிஸ்டர் செய்து தரும் அரசு அதிகாரிகளைக் கண்டுபிடித்து, அவர்களின் கைகளை வெட்டுவதற்கு ரோபோ போன்ற மெஷின்கள் வர வேண்டும்' என்று கூறினார்.

மேலும் தமிழகத்தில் எங்கெல்லாம் இந்துக் கோயில்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, கிறிஸ்துவ அமைப்புகள் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என்பதை பட்டியலிட்ட எச்.ராஜா, புதுக்கோட்டையிலும் அப்படி ஓர் இந்துக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்திருப்பதை நேரில் பார்த்துவிட்டு வந்ததாக கூறினார்.

அயோத்தியில் ராமர் கோயிலை மீட்க ஒன்று திரண்டது போல தமிழகமெங்கும் இந்து கோவிலின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாதை மீட்க பெருந்திரளாக திரள வேண்டும், கிறிஸ்துவ அமைப்புகளுக்குப் பதிவு செய்து கொடுத்த தாசில்தார், சார்பதிவாளர் ஆகியோர்களை கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசினை கேட்டுக்கொள்வதாகவும் எச்.ராஜா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments