Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் பாடத்தை படிக்கும் குழந்தைகள் ஒழுக்கமாக இருப்பார்களா? எச்.ராஜா

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (21:47 IST)
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சில நாட்களுக்கு ஒருமுறை சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

திராவிட கட்சியினர் பெரிதும் மதிக்கும் தந்தை பெரியாரை தேச துரோகி' என்றும், அவரது சிலையை அகற்ற வேண்டும் என்றும் சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த எச்.ராஜா தற்போது 'பெரியார், மணியம்மை குறித்த பாடங்களை பாடப்புத்தகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்ற எச்.ராஜா, அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'பெரியார்-மணியம்மை குறித்த பாடங்களை படிக்கும் குழந்தைகள் எப்படி ஒழுக்கமாக வளரும். ஒரு வயதானவர் ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்வதை ஏன் தடுக்கவில்லை என்று குழந்தை கேட்டால் அதற்கு என்ன பதில் உள்ளது.?

எனவே பெரியார் குறித்த பாடங்களை புத்தகங்களில் இருந்து நீக்கினாலே அனைத்தும் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். எச்.ராஜா கூறிய இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

இன்று தவெக பொதுக்குழு.. சரியாக 9 மணிக்கு வருகை தந்த விஜய்..!

வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.. அப்ப விஜய் நிலைமை? - தவெகவினர் போஸ்டரால் பரபரப்பு!

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments