Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் - யாரை சொல்கிறார் ஹெச்.ராஜா?

Webdunia
சனி, 17 பிப்ரவரி 2018 (14:33 IST)
அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்தை ஏற்காதவர்கள் புத்தி சுவாதினம் இல்லாதவர்கள் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

 
சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் “தமிழகம் தற்போது அமைதியாக இருப்பதாக பலர் கூறி வருகிறார்கள். ஆனால் அப்படி இல்லை. பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறி உள்ளது” என்று கூறினார். 
 
இதுகுறித்து ஒ.பன்னிர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது “மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லி இருப்பது உண்மைக்கு மாறானது. அது ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய்” என்று கூறினார்.  அதற்கு பதில் கூறிய பொன். ராதாகிருஷ்ணன் “ஜமுக்காளத்தில் கலப்படம் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.
 
பாஜகவும், தமிழக அரசும் இணைந்து செயல்பட்டு வருகிறது எனக் கூறி வந்த நிலையில், பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், ஓ.பி.எஸ்-ற்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா “ பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது முழுக்க முழுக்க உண்மை. தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள்” என கருத்து தெரிவித்தார்.
 
மறைமுகமாக துணை முதல்வர் பன்னீர் செல்வத்தைதான் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments