Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதறி கிடந்த அதிமுகவை ஒட்ட வைத்ததே பாஜகதான்! ஆனா அவங்க..? – எச்.ராஜா ஆவேசம்!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (10:46 IST)
பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக அறிவித்ததை தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதை பாஜக பிரமுகர் எச்.ராஜா “நான்சென்ஸ்” என விமர்சித்துள்ளார்.



கடந்த 2019 முதலாக நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றில் பாஜக – அதிமுக கூட்டணி தொடர்ந்து வந்தது. ஆனால் சமீப காலமாக பாஜக மாநில தலைமைக்கும், அதிமுகவிற்கும் முரண்பாடுகள் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

அதை கொண்டாடும் விதமாக பல இடங்களிலும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதை பார்த்து கடுப்பான எச்.ராஜா “ஏதோ இவங்கள நாங்க கட்டிப்போட்டு வைத்திருந்த மாதிரியும் இப்போ என்னவோ இவங்க விடுதலை ஆகிட்ட மாதிரியும் பட்டாசு வெடிச்சு கொண்டாடிட்டு இருக்காங்க. வாட் அ நான்சென்ஸ்..? ஜெயலலிதா மறைவுக்கு பின் சிதறிக் கிடந்த அதிமுகவை ஒன்றாக சேர்த்ததே பாஜகதான். நாங்கள் இல்லை என்றால் அதிமுக என்ற கட்சியே இல்லை. அந்த நன்றியை அதிமுக தலைவர்கள் மறக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

விஜய்க்கு எதிராக கமல்ஹாசனை களமிறக்க திமுக திட்டமா? நாளை முக்கிய அறிவிப்பு..!

அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments