Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆமை புகுந்த வீடும், அறநிலையத்துறை புகுந்த கோயிலும் உருப்படாது! எச்.ராஜா

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (11:15 IST)
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்வதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் நீதித்துறை குறித்து பேசிய சர்ச்சரிக்குரிய கருத்தால் நீதிமன்றமே தாமாக முன்வந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் தற்போது தமிழக அரசின் அறநிலையத்துறை குறித்தும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் நடந்த பாஜக கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு எச்.ராஜா பேசியபோது, ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று கூறுவதுண்டு. அதேபோல் அறநிலையத்துறை புகுந்த கோவியிலும் உருப்படாது என்று கூறியுள்ளார்.

கடந்த 1989ஆம் ஆண்டில் இருந்து தான் இந்து முன்னணியில் மாவட்ட செயலாளராக இருந்துள்ளதாகவும், அன்று முதல் இன்று வரை சுமார் 3000 கோவில்களுக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளதாகவும், அதில் வழிபாடு உள்ள கோயில், இடிபாட்டுடன் உள்ள கோவில், கோவிலுக்கு பதிலாக கட்டிடங்கள் ஆகியவை இருந்ததை தான் பார்த்ததாகவும் கூறினார். இப்படி ஒரு மோசமான அரசாங்கத்தின் மோசமான அறநிலையத்துறையால் கோவில்களை காப்பாற்ற முடியாது என்றும் அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:

தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாகை - திரிகோணமலை இடையே மையம்..!

கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்! உடனடியாக காவல்துறை எடுத்த நடவடிக்கை..

பொங்கல் திருநாளில் ICAI தேர்வுகள்.. தேதி மாற்றம் குறித்த அறிவிப்பு..!

2 நாட்களில் சுமார் 2000 குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments