Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடிக்கு எதிரான நடிகர் சித்தார்த்தின் டுவிட்டுக்கு ஹெச்.ராஜா பதிலடி

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (14:35 IST)
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக விமானப்படையினர் நடத்திய தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்பதா என  பிரதமர் மோடி,  கேள்வி எழுப்பியிருந்தார்.


 
இதற்காக நடிகர் சித்தார்த் பிரதமர் மோடியை விமர்சித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ''நம் தேசத்தின் மக்கள் நம் நாட்டு ராணுவத்துடனும் ராணுவ வீரர்கள் பக்கமும்தான் நிற்கிறார்கள். நீங்களும் உங்கள் கும்பலைச் சேர்ந்தவர்களும்தான் நம்புவதில்லை. முதலில் புல்வாமாவை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்.
 
உண்மையான ஹீரோக்கள் பின்னால் ஒளிந்து கொண்டு நிஜ ஹீரோக்களாக பாசாங்கு செய்ய வேண்டாம்" என கூறியுள்ளார்.
 
இதற்கு பதிலடி கொடுத்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜழ டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
 
அதில் 26/11 பயங்கரவாத தாக்குதலில் பலர் கொல்லப்பபட்டனர், காயமடைந்தனர். அப்போது விமானப்படை தாக்குதல் நடத்த  அனுமதி கேட்ட போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் மோடி அரசு நமது படையினருக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது. எனவே ஒரு நடிகர் தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

நெல்லையை அடுத்து மதுரையில்.. அதிமுக ஆய்வுக்குழு கூட்டத்தில் அடிதடி..!

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

வானத்திற்கும் பூமிக்கும் முழங்கிய ஸ்டாலின் ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள்: என்ன பதில்? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments