தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் – மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய ஹெச் ராஜா !

Webdunia
வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (09:10 IST)
தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் என பாஜக வின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 21 ஆம் தேதிகைது செய்யப்பட்டார். சிபிஐ காவலில் வைக்கப்பட்டு வந்த அவர் இப்போது நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது பற்றி பேசிய ஹெச் ராஜா சிதம்பரத்தின் கதிதான் எதிர்க்கட்சி தலைவருக்கும் எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பினார். அவர் ஸ்டாலினைதான் சொல்லுகிறார் என்று திமுகவினரும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டையில் நேற்று பேசிய அவர் ‘ப.சிதம்பரத்தைப் போன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார்.’ எனக் கூறி மீண்டும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments