Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி ஏன் கொலை செய்யப்பட்டார்?: விளக்கம் தரும் எச்.ராஜா

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2016 (10:05 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ஆம் தேதி இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
ராம்குமார் கைது செய்யப்பட்டதும் இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்களும், முரன்பாடுகளும் எழுப்பப்பட்டு வருகிறது. ராம்குமார் தலித் என்பதால் அவருக்கு ஆதரவாக தலித் அமைப்புகள் செயல்படுவாதாக கூறப்படுகிறது.
 
முன்னதாக சுவாதியை பிலால் மாலிக் என்ற முஸ்லீம் இளைஞர் கொலை செய்ததாக ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட சிலர் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது இந்த கொலை வழக்கில் பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார் விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் திருமாவளவன்.
 
சுவாதி முஸ்லீமாக மாற இருந்தார், அவர் ரமலான் நோன்பு இருந்தார், இவை ஆர்.எஸ்.எஸ். தரப்பினருக்கும் தெரியும் என திருமாவளவன் கூறியதற்கு பாஜகவின் எச்.ராஜா கடும் கண்டணங்கள் தெரிவித்து அவர் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
 
இந்நிலையில் சுவாதி முஸ்லீம் மதத்திற்கு மாற நினைக்கவில்லை, அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் ஒன்றை எச்.ராஜா கூறியுள்ளார்.
 
எங்களுக்கு கிடைத்த தகவல்படி அந்த பையன் இந்துவாக மாறி சுவாதியை திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாகவும் அதற்காக சைவ உணவுக்கு அவர் மாறியதாகவும் சொல்கிறார்கள். அவர் இந்துவாக மாறிவிடக்கூடாது என்பதற்காக சுவாதியை கொலை செய்துவிட்டதாக பேசுகிறார்கள் என எச்.ராஜா கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments