பாஜக வெற்றி பெற்றால்தான் எல்லாம் நடக்கும் - ஹெச்.ராஜா சர்ச்சை கருத்து

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (10:44 IST)
மத்திய அரசு காவிரி மேலாண்ம வாரியம் அமைப்பது பற்றி பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கொடுத்த 6 வார கெடு நேற்றோடு முடிவடைந்தது. ஆனாலும், உச்ச நீதிமன்றம் எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. இது தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இதுபற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா “ உச்ச நீதிமன்றம் ‘ஸ்கீம்’ என்கிற வார்த்தையைத்தான் குறிப்பிட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் என்று கூறவில்லை. அதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.  இதே உச்ச நீதிமன்றம்தான் நீட் தேர்வை கொண்டுவந்தது. ஆனால், திமுக ஏற்கவில்லை. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி பேச இவர்களுக்கு தகுதி இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்து போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. 
 
கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றால்தான காவிரி மேலாண்மை அமையும். எனவே, கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள்” எனப் பேசினார்.
அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments