ஆடிட்டர் குருமூர்த்தி போட்ட டிவிட்: கதிகலங்கி போன அதிமுக!!

Webdunia
சனி, 1 ஜூன் 2019 (09:38 IST)
தமிழகத்தில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டதால் தோற்றுவிட்டது என சொல்லாமல் சொல்லியுள்ளார் ஆடிட்டர் குருமூர்த்தி.
 
மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமாகா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதில் ஒரு தொகுதியில் மட்டுமே இந்த கூட்டணி வெற்றி பெற்றது. 
 
ஆனால் தேசிய அளவில் 303 இடங்களில் பாஜக தனித்து வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளில் பாஜகவும், 7 தொகுதிகளில் பாமகவும், 4 தொகுதிகளில் தேமுதிகவும் தலா ஒரு தொகுதியில் புதிய தமிழகம், புதிய நீதி கட்சியும் படுதோல்வி அடைந்தது. 
 
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஆடிட்டர் குருமூர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த டிவிட் பின்வருமாறு... 
அதாவது, தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை இருந்திருந்தால் 5 இடங்களிலும் 4 முதல் 5 லட்சம் வித்தியாசத்தில் தோற்றிருக்க வேண்டும். அப்படியென்றால் இது யாருக்கு எதிரான அலை? என கேட்டுள்ளார். 
 
ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வியோடு அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டதால் தோற்றுவிட்டது என சொல்லாமல் சொல்லியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments