Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் அடுத்து கூட்டணி ஆட்சிதான்: குண்டுராவ் போட்ட குண்டு

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (14:01 IST)
தமிழ்நாட்டில் அடுத்து கூட்டணி ஆட்சிதான்: குண்டுராவ் போட்ட குண்டு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் இப்போதே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன 
 
குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி அதே கூட்டணியில் நீட்டிக்குமா? அல்லது போதுமான தொகுதி கிடைக்காமல் கூட்டணி மாறுமா அல்லது தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது 
 
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி தனி அணி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கூறப்படுகிறது. இப்போதைய நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவே விரும்புகின்றனர் என்பதே செய்தியாக உள்ளது
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என சமீப காலமாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூறிவருகின்றனர். இதையடுத்து தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை வந்துள்ளார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த குண்டுராவ் தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி கூட்டணி ஆட்சிதான் என்றும் வரும் தேர்தலில் திமுக காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
கட்சி ஆரம்பித்த நாள் முதலே கூட்டணி ஆட்சியை விரும்பாத திமுக, தற்போது மட்டும் கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments