Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுக்கோட்டை துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையத்தை மூட உத்தரவு!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (13:02 IST)
நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையத்தை மூட வேண்டும் என புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு உத்தரவு. 

 
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பயிற்சி மையத்தில் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் துப்பாக்கிசூடு பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது வீரர் ஒருவர் சுட்ட குண்டு அந்த பகுதியில் இருந்த வீடு ஒன்றில் இருந்த சிறுவன் புகழேந்தியை தாக்கியுள்ளது.
 
இதனால் சிறுவன் அவசர சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையத்தை மூட வேண்டும் என புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments