Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப் 4 தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் செய்ய வேண்டியது என்ன?

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (22:41 IST)
தமிழக அரசு சமீபத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - IV (தொகுதி-IV) ல் அடங்கிய பணிகளுக்கு 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிக்கை எண் 23/2017ஐ, 14.11.2017 அன்று வெளியிட்டது. இந்த பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் 11.02.2018 அன்று தமிழகத்தின் 301 தாலுக்கா மையங்களிலும் நடைபெறவுள்ளது.

சுமார் 20.8 லட்சம் பேர் எழுதவுள்ள இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in-ல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப பதிவு எண்/பயனாளர் குறியீடு (Registration ID/Login ID) மற்றும் பிறந்த தேதியினை குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். அல்லது தங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்

மேலும் விண்ணப்ப கட்டணம் கிடைக்க பெறாதவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்திய லானுடன் contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் இமெயில் முகவரிக்கு 06.02.2018 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இவ்வாறு தமிழக அரசின் தேர்வுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments