Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனர் பணியிடங்கள் நேரடி நியமனம்! – அமைச்சர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (09:01 IST)
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் கம் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கான நியமனம் நேரடியாக நடைபெறும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் (SETC) சுமார் 1484 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களும், கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் 222 ஓட்டுனர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதில் 122 ஓட்டுனர் பணியிடங்கள், 685 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் (Drivver cum conductor) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் “அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுனர் கம் நடத்துனர் பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிட்டெடில் உள்ள 122 ஓட்டுனர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் அதாவது வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து நிரப்பப்படும்.

அதன்படி விரைவு போக்குவரத்துக்கழக ஓட்டுனர் கம் நடத்துனர் பணியிடங்களுக்கு தேவையான கல்வி, வயது மற்றும் பிறதகுதிகள் கொண்ட நபர்களின் பட்டியல் தமிழ்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து பெறப்படும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிட் –ன் ஓட்டுனர் பணியிடங்களுக்கு தேவையான கல்வி, வயது மற்றும் பிற தகுதிகள் கொண்டவர்களின் பட்டியல் அப்போக்குவரத்துக்கழக எல்லைக்குட்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து பெறப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இணைய வழி விண்ணப்பங்களும் பெறப்பட்டு, அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து தகுதி வாய்ந்த நபர்களை அந்தந்த மேலாண் இயக்குனர்களால் அமைக்கப்பட்ட குழு, சாலை போக்குவரத்து நிறுவன உதவியுடன் அரசு விதிமுறைகளின்படி தேர்வு செய்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments