Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீமைக்கருவேல மரங்களை அகற்ற தீவிர நடவடிக்கை

சீமைக்கருவேல மரங்களை அகற்ற தீவிர நடவடிக்கை

சீமைக்கருவேல மரங்களை அகற்ற தீவிர நடவடிக்கை
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (21:02 IST)
தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகப் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


 

 
தமிழக சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
அதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் அடிப்படையில், சீமைக்கருவேல மரங்களை அகற்றப் பரப்பரளவு கணக்கீடு மற்றும் அகற்றுவதற்கான செலவு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். 
 
மேலும் ஆற்றங் கரையில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் கூறினார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பியூஷ் மனுஷ் சிறையில் தாக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை