Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 பேருக்கு தங்க நாணயம், 300 பேருக்கு மிக்ஸி, கிரைண்டர்! - கூட்டம் சேர்க்க அதிமுகவின் பலே ப்ளான்!

Prasanth Karthick
திங்கள், 3 மார்ச் 2025 (14:40 IST)

ஊத்துக்குளியில் நடைபெற உள்ள அதிமுக கூட்டத்திற்கு மக்களை அழைக்க விடுக்கப்பட்டுள்ள விளம்பரம்தான் தற்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளது.

 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்படத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் அதிமுகவும் பல்வேறு பகுதிகளில் கட்சிக் கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ள நிலையில், விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டு வருகிறார்.

 

இந்நிலையில் ஊத்துக்குளி டவுனில் தெற்கு ஒன்றிய கழகத்தின் கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பொள்ளாச்சி ஜெயராமன், கே.சி.கருப்பணன் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் கலந்துக் கொண்டு பேச உள்ளனர். இதற்காக வழங்கப்பட விளம்பர போஸ்டர்களில், கூட்டத்திற்கு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் 3 பேருக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதுமட்டுமல்லாமல் 300 பேருக்கு குலுக்கல் முறையில் மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் உள்ளிட்ட மின் சாதனங்களும், கூட்டத்திற்கு வரும் அனைவருக்கும் சிறப்பு பரிசும் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டத்திற்கு மக்களை ஈர்க்க ஊத்துக்குளி அதிமுகவினர் செய்த இந்த விளம்பரம் தற்போது வைரலாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் கட்சிக்கு அழைப்பில்லை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிராக ஐகோர்ட்டில் மனு..!

சாலை விபத்தில் படுகாயம் .. தலையில் கட்டுடன் தேர்வு எழுத வந்த பிளஸ் 2 மாணவி..!

பேரிடர் மையம், மீன்பிடி இறங்கு தளம் etc.,!? நாகை மக்களுக்கு திட்டங்களை அள்ளி வழங்கிய முதல்வர்!

எகிறிய கடன்! நடிகர் திலகம் சிவாஜியின் வீடு ஜப்தி! - நீதிமன்றம் உத்தரவு!

ரெண்டு தரப்பும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க! சீமானை விசாரிக்க இடைக்கால தடை! - உச்சநீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments