Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குப்பையில் கிடந்த தங்க சங்கலி - தூய்மை பணியாளர் செய்த தரமான சம்பவம்.! குவியும் பாராட்டு..!!

Senthil Velan
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (16:21 IST)
சென்னையில் குப்பையில் தவறவிட்ட ரூ.1.65 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பாலுவுக்கு  பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  
 
சென்னை அடையார் பகுதியில் உள்ள பரமேஸ்வரி நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் காமாட்சி சந்தானம். இவர், தனக்கு சொந்தமான ரூ.1.65 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியைத் தெரியாமல் குப்பையோடு குப்பையாக போட்டுள்ளார். 

இந்த நிலையில் தூய்மை பணியாளர் பாலு, குப்பைகளைப் பிரிக்கும் போது இந்த தங்க நகையை கண்டுபிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, காமாட்சி சந்தானத்தின் தங்க நகை தொலைந்த தகவலை அறிந்த பாலு,  தங்க நகையை உரியவரிடம் நேரில் சந்தித்து ஒப்படைத்துள்ளார். 


ALSO READ: சீக்கியர்கள் குறித்து கருத்து.! ராகுல் மீது வழக்கு தொடரப்படும்.! பாஜக எச்சரிக்கை..!!
 
காணாமல் போன தங்க நகை கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்த காமாட்சி- சந்தானம் தம்பதியினர் தூய்மை பணியாளர் பாலுவுக்கு நன்றி தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த தகவல் அறிந்த அதிகாரிகளும், சக ஊழியர்களும் பாலுவுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடை! பிரதமர் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!

நுரையீரல் தொற்று பாதிப்பு.! வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் காலமானார்.!!

அணு ஆயுதங்கள் பத்தாது.. இன்னும் அதிகம் வேணும்!? - வடகொரிய அதிபர் உத்தரவு!

மதுபாட்டில்களை ஜேசிபியால் அழிக்க முயன்ற போலீசார்: முந்தியடித்து தூக்கிச் சென்ற மதுபிரியர்கள்..!

வளர்ப்பு நாய் கடித்து சிறுமி காயம்.! நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments