Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு இல்லை… இந்தியா இல்லை… உலக அளவில் டிரண்ட் ஆன கோபேக் மோடி !

Webdunia
ஞாயிறு, 27 ஜனவரி 2019 (11:17 IST)
இன்று தமிழகம் வர இருக்கும் மோடிகு எதிர்ப்புக் காட்டும் விதமாக உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக்கான கோபேக் மோடி உலக அளவில் டிரண்ட் ஆகியுள்ளது.

மதுரைக்கு அருகேயுள்ள தோப்பூரில் 1200 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் தமிழகம் வர இருக்கிறார்.

கஜா புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட வராதது, மேகதாட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாடு, ஸ்டெர்லைட் விவகாரம் மற்றும் பொருளாதார ரீதியிலான 10 % இடஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி மோடி வருகையின் போது எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டப்படும் என்று மதிமுக, திவிக, மே 17 மற்றும் பெரியாரிய இயக்கங்கள் அறிவித்துள்ளன.

சென்ற முறை மோடி சென்னை வந்தபோது கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக்  ட்ரண்ட் ஆனதை அடுத்து இம்முறை முந்திக்கொண்ட தமிழக பாஜகவினர் பிரதமரை வரவேற்கும் விதமாக #MaduraiThanksModi #comecomemodi என்ற ஹாஷ்டேக்குகளைப் பயன்படுத்தி பதிவுகள் இட ஆரம்பித்தனர். இது டிரண்ட் ஆகவே, விழித்துக்கொண்ட தமிழர்கள் மீண்டும் #Gobackmodi என்ற ஹேஷ்டேக்கை டிரண்ட் ஆக்க ஆரம்பித்தனர். இதனால் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் கோபேக் மோடிக்கும் கம்கம்மோடிக்கும் இடையில் டிரண்ட் ஆவதில் போட்டி உண்டானது.

ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே  #MaduraiThanksModi #comecomemodi ஐ விட #Gobackmodi இந்திய அளவில் டிரண்ட்டிங்கில் முன்னிலையில் வந்தது. நேற்று முதல் தொடர்ந்த டிரண்டிங் போட்டியில் #Gobackmodi என்ற ஹேஷ்டேக் இப்போது உலக அளவில் டிரண்ட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments