Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிநீர் தொட்டியில் புழுக்கள்.. மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தர்ணா போராட்டம்..!

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (12:30 IST)
குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருந்ததாக கூறி சேலம், கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் திடீரென தர்ணா போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போராட்டம் செய்யும் மாணவிகள் கூறியபோது, ‘*மாணவிகள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்ததாகவும், இதுகுறித்து புகார் அளித்தால், மதிப்பெண்ணை குறைத்து விடுவோம் என ஆசிரியர்கள் மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளியில் போதுமான கழிப்பறை வசதிகள் செய்து தரவும் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி நிர்வாகம் குடிநீர் தொட்டியை பல மாதங்களாக தூய்மைப்படுத்தவில்லை என்றும், மாணவிகளுக்கு சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி வருகிறது என்றும், இந்த குடிநீரைப் பருகும் மாணவிகளின் உடல் நிலை பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மாணவிகளின் பெற்றோர்களும் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

மேலும் இதுகுறித்து புகார் அளிக்க சென்ற இரண்டு மாணவிகளையும் முட்டி போட வைத்து தண்டனை கொடுத்ததாகவும் இதை வெளியில் யாரிடமாவது கூறினால் டிசி கொடுத்து பள்ளியில் இருந்து அனுப்பி விடுவோம் என தலைமை ஆசிரியர் மிரட்டியதாகவும்  கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் சேலம் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை மற்றும் பள்ளி நிர்வாகம் உடனடியாக குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  முதன்மை கல்வி அலுவலர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments