Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலன் உதவியோடு நண்பர்கள் மாணவியிடம் சில்மிஷம்

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2016 (18:19 IST)
நாகர் கோயிலில் கல்லூரி மாணவியை அவரது காதலன், நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


 

 
குமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி, வேன் டிரைவர் சுரேஷ் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் 13ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்து, அந்த மாணவி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
 
இருவரும் சேர்ந்து நாகர் கோயில் சென்று அங்கு சுரேஷ் அவரது நண்பர்களின் உதவியோடு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்கள். அன்று இரவு சுரேஷ் கட்டாயப்படுத்தி மாணவியுடன் உறவு கொண்டுள்ளார்.
 
மறுகாலை திருமணத்துக்கான பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறி, சுரேஷ் மாணவியிடம் இருந்த நகைகளை வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். அந்த நேரத்தில் சுரேஷ் உடைய இரண்டு நண்பர்கள் அறைக்கு சென்று அந்த மாணவியை கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
 
அதன்பிறகு சுரேஷின் மற்றோரு நண்பன் பக்கத்து அறையில் தங்கியிருந்துள்ளான். அவனும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். கடைசியாக சுரேஷ் அறைக்கு வந்த பின்னர் தான் அந்த மாணவிக்கு தெரியவந்தது.
 
இந்த சம்பவங்கள் அனைத்தும் சுரேஷின் உதவியோடு தான் நடந்துள்ளது என்பது. அதன்பிறகு அந்த மாணவி அவர்களுடன் சண்டை போட்டுக்கொண்டு இருந்துள்ளார்.
 
இதனிடையே 13ஆம் தேதி அன்றே மாணவியின் பெற்றோர் மகளை காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் அந்த மாணவியை தேதி வந்தனர்.
 
அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக லாட்ஜில் பிரச்சணை அறிந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்னை அவர்களிடம் இருந்து மீட்டனர். அப்போது காணமல் போன பெண்ணும் அவர்தான் என்பதை அறிந்தனர்.
 
அதன்பிறகு அந்த நான்கு நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்வு.. என்னென்ன பங்குகள் லாபம்..!

மாமியாரை பயன்படுத்தி பண மோசடி செய்த சிறை வார்டன்.. சஸ்பெண்ட் செய்ய உத்தரவு..!

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.. என்ன காரணம்?

பொள்ளாச்சி வழக்கு போலவே கோடநாடு வழக்கிலும் உரிய தீர்ப்பு கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

கோடை வெயிலுக்கு இலவசமாக குளுகுளு ஏசியா? யார் கிளப்பி விட்டது? - தமிழக அரசு விளக்கம்!

அடுத்த கட்டுரையில்