Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனிடம் சரமாரியாக கேள்வி கேட்ட மாணவி: பதில் அளிக்க முடியாமல் திணறல்!

தினகரனிடம் சரமாரியாக கேள்வி கேட்ட மாணவி: பதில் அளிக்க முடியாமல் திணறல்!

Webdunia
திங்கள், 27 மார்ச் 2017 (12:28 IST)
ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக அம்மா அணியை சேர்ந்த டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் களம் இறங்கியுள்ளார். இந்த தேர்தல் தினகரனின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் இதில் வெற்றி பெற்றாக வேண்டியா கட்டாயத்தில் உள்ளார் அவர்.


 
 
இதனையடுத்து அவர் ஆர்கே நகரில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று மாலை ஆர்கே நகரின் தண்டையார்பேட்டை, குறுக்கிப்பேட்டை, நேதாஜி நகர், செழியன் நகர், கருணாநிதி நகர் ஆகிய பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
 
அப்போது பேசிய அவர் மதுசூதனன் தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னம் மின்விளக்கு தான். ஆனால் அவர்கள் அதனை திரித்து இரட்டை மின்விளக்கு என இரட்டை இலை சின்னம் போல பிரச்சாரம் செய்கின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக கூறினார்.
 
இந்நிலையில் அங்கி நின்று கொண்டிருந்த மஞ்சு என்ற மாணவியும், அவரது தாயாரும் தினகரனிடம் சரமாரியாக கேள்வி கேட்டனர். இதற்கு தினகரனால் பதில் அளிக்க முடியவில்லை.
 
ஐந்து வருடத்துக்கு ஒருமுறை ஓட்டு கேட்க மட்டும் வரும் நீங்கள் நாளைக்கு வெற்றி பெற்றால் வருவீர்களா என மாணவி மஞ்சு கேட்ட கேள்விக்கு கண்டிப்பாக வருவேன் என்றார் தினகரன். நீங்க அறிவிக்கற திட்டம் எதுவும் மக்களுக்கு முழுசா  வந்து சேர்வது இல்லை என மாணவி அடுத்த கேள்வியை கேட்க அதற்கு பதில் அளிக்க முடியாமல் தினரன் நின்றார்.
 
இதனையடுத்து அங்கு நின்றிருந்த தினகரன் ஆதரவாளர்கள் அந்த மாணவியையும் அவரது தாயையும் திட்ட ஆரம்பித்தனர். அதற்கு பதிலடி கொடுத்த அந்த மாணவி, நான் ஒட்டு போடுறன், கேள்வி கேட்பேன். கேள்வி கேட்டா யாராக இருந்தாலும் பதில் சொல்லனும் என்றார் அதிரடியாக.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments