Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் தோல்வியால் ”ஆசிட்” குடிக்க முயன்ற மாணவி.. காதலனை கைது செய்த போலீஸார்

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (13:37 IST)
திருப்பூர் அருகே காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் மாணவி ஒருவர் ”ஆசிட்” குடித்து தற்கொலை செய்யமுயன்ற சம்பவம் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரைச் சேர்ந்த அருண்குமார் என்பவர், திருப்பூரில் உள்ள அவரது மாமா வீட்டில் தங்கி, ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். அந்த சமயத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் அருண்குமாருக்கு காதல் ஏற்பட்டது. அருண்குமார், அந்த மாணவியை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்ததால், இருவரும் பல நாட்களாகச் பல இடங்களுக்கு காதல் பொழுதை இன்பமாக கழிக்க சுற்றுயுள்ளனர். இருவரும், இப்படியே பல நாட்கள் சந்தித்து கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அருணிடம் அந்த மாணவி கேட்டுள்ளார். அதற்கு அருண்குமார் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என பதிலளித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் இருந்த ஆசிடை எடுத்து குடித்துள்ளார். பின்பு உயிருக்கு போராடிய மாணவியை அவரது பெற்றோர் திருப்பூர் அரசு மருத்துவமையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது குறித்து மாணவியின் பெற்றோர் திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் 17 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி காதலித்து ஏமாற்றியதால், அருண்குமாரின் மீது போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments