Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கொலை : கள்ளக்காதலனுடன் சிக்கினாள் கொலைகாரி

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2015 (14:35 IST)
மதுரையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை, நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரை தல்லாகுளம் பகுதியில், பவித்ரா(23) என்பவர் தனது மாமியாருடன் வசித்து வருகிறார். இவரின் கணவர் துபாயில் என்ஜினியராக பணிபுரிகிறார். 
 
இவர் சம்பவத்தன்று வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இவர் அணிந்திருந்த 9 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டு இருந்தது.
 
இதுகுறித்து, பவித்ராவின் மாமியாரிடம் போலிசார் விசாரணை செய்ததில், சம்பவம் நடப்பதற்கு ஒரு நாள் முன்பு, தல்லாகுளத்தில் உள்ள டெய்லர் கடையில் வேலை பார்க்கும் சியாமளா என்ற பெண் வீட்டிற்கு வந்து சென்றதாக தெரிவித்தார்.
 
அவரை விசாரிக்க போலிசார் சென்ற போது, அவரின் வீடு பூட்டியிருந்தது. அவர் வேலை செய்யும் கடைக்கும் வரவில்லை. அடுத்த நாள், சியாமளா, வக்கீல் ஒருவருடன் அடுத்த போலிஸ் நிலையம் சென்று எதற்காக என்னை தேடினீர்கள் என்று கேட்டுள்ளார்.
 
சியாமளா, வக்கீல் ஒருவருடன் வந்ததால், சந்தேகம் அடைந்த போலிசார், அவரை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அவரின் வீட்டிற்கு டிரைவர் ஒருவர் அடிக்கடி வந்து செல்வதை கண்டுபிடித்தனர். அவர் ஏதோ தவறான வழியில் செயல்படுவதாக உணர்ந்தனர்.  
 
அதன் பின் சியாமளாவிடம், போலிசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவரின் கள்ளக்காதலரான அந்த ட்ரைவரின் பணப் பிரச்சனைக்காக பவித்ராவை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். சம்பவத்தன்று வீட்டிற்கு சென்ற சியாமளா, தனது காதலனை பவித்ராவிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். பவித்ரா வீட்டிற்குள் அவர்களை அமரவைத்து டீ கொடுத்துள்ளார்.
 
அதன் பின் சியாமாளா, பவித்ராவை பின்னாளிலிருந்து பிடித்துக் கொள்ள அவரின் காதலன் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் பவித்ரா ரத்தவெள்ளத்தில் சாய்ந்துள்ளார். அதன் பின் அவர் அணிந்திருந்த நகையை எடுத்துக்கொண்டு அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர் என்று வாக்கூமூலம் கொடுத்துள்ளார்.
 
அவர்கள் இருவரையும் கைது செய்து, போலிசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments