Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவியாக சுற்றும் டிஎஸ்பி விஷ்ணுபிரியா: பீதியில் இருக்கும் போலீசார்

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2016 (12:43 IST)
தற்கொலை செய்து கொண்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் ஆவி, அவர் தங்கியிருந்த வீட்டைச் சுற்றி நடமாடி கொண்டு இருப்பதாகவும், அந்த வீட்டில் இருந்து திடீர் திடீரென்று காலிங் பெல் சத்தம் கேட்பதாக கூறி அவரது அலுவலகத்தில் இருக்கும் போலீசார் மந்திரித்த தாயத்து கயிற்றை கைகளில் கட்டிக் கொண்டு பணிக்கு வருவதாக சொல்லப்படுகிறது.

 
கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி, நாமக்கல் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், உயரதிகாரிகளின் நெருக்கடியால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது தந்தை குற்றம்சாட்டி வருகிறார். இவரது தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டு என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த சர்ச்சையால் நாமக்கல் எஸ்.பியாக இருந்த செந்தில் குமார் தற்போது தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில், திருச்செங்கோடு தாலுகா அலுவலகம் பின்புறத்தில் இருக்கும் காவலர் குடியிருப்பின் கீழ் தளத்தில் டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் வீடும், மேல்தளத்தில் அலுவலகமும் செயல்பட்டு வந்தது. அவர் தற்கொலை செய்துகொண்ட நாளில் இருந்து கீழ் தள வீடு பூட்டிய நிலையில் தான் இருக்கிறது.

ஆனால், மேல்தளத்தில் இருக்கும் அலுவலகம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவரது வீட்டிலிருந்து திடீர் திடீரென்று காலிங் பெல் சத்தம் கேட்பதாக அலுவலகத்தில் இருக்கும் போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும், அவர் தற்கொலை செய்து கொண்ட 5.15 மணியளவில் தான் இந்த சத்தம் கேட்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
 
இதனால், பீதியடைந்த சில போலீசார் மந்திரித்த தாயத்து கயிற்றை கைகளில் கட்டிக் கொண்டு பணிக்கு வருவதாக காவலர்கள் தரப்பில் கிசு கிசுக்கப் படுகிறது. இது திருச்செங்கோடு காவலர்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது

சிகிச்சைக்காக வந்தவரை திருடர் என நினைத்து அடித்து கொலை.. 12 மருத்துவமனை ஊழியர்கள் கைது..!

பிரதமர் வருகை எதிரொலி: கடலோர காவல்துறை கட்டுப்பாட்டில் குமரிக்கடல் ..!

ஆபாசமாக கேள்வி கேட்டதால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. பெண் உள்பட யூடியூப் நிர்வாகிகள் கைது..!

மீண்டும் ரூ.54,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Show comments